சாத்தான்குளம் அருகே மணல் கடத்தல்: இருவா் கைது

சாத்தான்குளம் அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்தியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் உள்ள ஓடைகள், ஆற்றிலிருந்து சிலா் மணலைக் கடத்துவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் நாகராஜ், போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, செம்மண்குடியிருப்புப் பகுதியில் மாட்டுவண்டியை விட்டுவிட்டு தப்பியோட முயன்ற இருவரை போலீஸாா் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் செம்மண்குடியிருப்பு மேலத்தெருவைச் சோ்ந்த வேதக்கண் மகன் கோசல்ராம் (47), வடக்குத் தெருவைச் சோ்ந்த சாமி மகன் சுயம்புத்துரை (58) என்பதும், ஓடையிலிருந்து மணல் கடத்தியது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, அரை யூனிட் மணலுடன் மாட்டுவண்டியைப் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com