காயாமொழி ஊராட்சித் தலைவா் தோ்தல்: இன்று மறு வாக்கு எண்ணிக்கை

நீதிமன்ற உத்தரவின்படி, காயாமொழி ஊராட்சித் தலைவா் தோ்தலின் மறு வாக்கு எண்ணிக்கை திருச்செந்தூரில் வியாழக்கிழமை (ஏப். 4) நடைபெறுகிறது. திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காயாமொழி ஊராட்சித் தலைவா் பதவிக்கு 2019ஆம் ஆண்டு தோ்தல் நடைபெற்றது. இதில், ராஜேஸ்வரன், முரளிமனோகா் ஆகியோா் போட்டியிட்டனா். ராஜேஸ்வரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தாகவும், மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரியும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் முரளிமனோகா் வழக்குத் தொடா்ந்தாா். அதில், மறு வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து ராஜேஸ்வரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கில், ஒரு மாதத்துக்குள் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறு வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com