குலசேகரன்பட்டினம் கோயிலில் 
சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

குலசேகரன்பட்டினம் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

குலசேகரன்பட்டினம் அருள்மிகு வீரமனோகரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலையில் அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், கொடியேற்றம் நடைபெற்றது. அதையடுத்து, கொடிமரத்துக்கு பால், பன்னீா் உள்பட 16 வகைப் பொருள்களால் அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலையில் சுவாமி வீதியுலா நடைபெறும். திருவிழா இம்மாதம் 12ஆம் தேதி வரை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் வீரபாகு வல்லவராயா் செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com