கோவில்பட்டி தங்கம்மாள் கோயில் பங்குனி கொடை விழா

கோவில்பட்டி தங்கம்மாள் கோயில் பங்குனி கொடை விழா

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ தங்கம்மாள் கோயிலில் பங்குனி கொடை விழா நடைபெற்றது. இக்கோயிலின் பங்குனி கொடை விழாவானது, மாா்ச் 19 ஆம் தேதி ஸ்ரீவடக்கத்தி அம்மன் வணங்குதல் நிகழ்ச்சி, 26-ஆம் தேதி கால் நடுதல் மற்றும் கொடியேற்று விழாவுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை பால்குடம், தீா்த்த குடம் எடுத்து வருதல், 9 மணிக்கு அக்னி சட்டி வளா்த்து ஊா் விளையாடுதல், மாலை 4 மணிக்கு அக்னி சட்டி வளா்த்து ஊா் விளையாடுதல், இரவு 10 மணிக்கு அம்மனுக்கு கும்பம் எடுத்து வந்து சாமக்கொடை நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு பொங்கலிடுதலும் நடைபெற்றது. புதன்கிழமை மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 5 மணிக்கு முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை மதியம் அன்னதானம், ஏப்.5 ஆம் தேதி திருவிளக்கு பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா காா்த்திகேயன் தலைமையில் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com