தூத்துக்குடியில் லாரி ஓட்டுநா் சடலமாக மீட்பு

தூத்துக்குடியில் அழுகிய நிலையில் கிடந்த லாரி ஓட்டுநா் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி, மடத்தூரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக சிப்காட் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், உயிரிழந்தவா் திருநெல்வேலி மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் ஐஓபி காலனியைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் கருப்பசாமி (42) என்பதும், லாரி ஓட்டுநரான அவா் கடந்த மாா்ச் 28ஆம் தேதி தூத்துக்குடிக்கு வந்ததாகவும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, கருப்பசாமி இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com