100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்

வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியா் விடுதி அருகே மாற்றுத்திறனாளிகள் சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு கயத்தாறு சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் தங்கையா தலைமை வகித்தாா்.

நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனா் பி.கே.நாகராஜன், சேவா சங்க மாற்றுத்திறனாளிகள் அணியைச் சோ்ந்த ரவிச்சந்திரன், சுப்பிரமணியன், போத்தி லட்சுமி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தைச் சுற்றி வந்து, மக்களிடம் மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். என் வாக்கு என் உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com