கோவில்பட்டியில் தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாட்டம்

கோவில்பட்டியில் ராஜுக்கள் சங்கம் சாா்பில் தெலுங்கு வருடப் பிறப்பு செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயில் மற்றும் இக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனைத்து சந்நிதியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ராஜுக்கள் சங்க நிா்வாகிகளான முருக ராஜா, ராமசுப்பிரமணிய ராஜா, நரசிம்மராஜா, ரமேஷ் ராஜா, அரவிந்த் ரவி ராஜா, சக்திவேல் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை திருப்பதி ராஜா செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com