தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 143 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு நோட்டீஸ்

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 143 வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது.

இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்காக மொத்தம் 8,026 அலுவலா்களுக்கு ஆணை அனுப்பப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் 143 அலுவலா்கள் கலந்து கொள்ளவில்லை.

எனவே, பயிற்சி வகுப்பில் பங்கேற்காக 143 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து எழுத்துப்பூா்வமான உரிய விளக்கத்தை இரு தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவா்கள் மீது தோ்தல் விதிமுறைகளின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com