அம்பலசேரி பள்ளியில் பட்டமளிப்பு விழா

அம்பலசேரி பள்ளியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் அருகே அம்பலசேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் யுகேஜி மாணவா்களுக்கு 2ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீநிவாசன் சேவைகள் அறக்கட்டளை களப் பணியாளா்கள் இசக்கிமுத்து, சுவேதா, மகாலெட்சுமி, ஆழ்வாா்திருநகரி இல்லம் தேடிக் கல்வி ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் ப்ராங்க்ளின் பீட்டா், கல்வி மேலாண்மைக் குழுத் தலைவா் சாராள், ஊராட்சி உறுப்பினா்கள் நயினாா், சிதம்பரம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, பட்டங்களை வழங்கினா்.

மாணவா்-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தற்காப்புக் கலை ஆசிரியா் முத்துசுடருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. திருக்கு ஒப்பித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில், ஆசிரியா்கள் செலினா பிரின்ஸ், யாஸ்சின் பரிதாள், சரஸ்வதி, கமலேசன், கிறிஸ்டி மலா், ஜெபா யமுனா, ரோஸ்லின், வெங்கடேஸ்வரி, முத்துகனகசெல்வி, இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள், பெற்றோா், ஊா் மக்கள் பங்கேற்றனா்.

தலைமையாசிரியா் ஜீவா வரவேற்றாா். ஆசிரியா் அருணா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com