காயல்பட்டினம் கடற்கரையில் ரமலான் சிறப்புத் தொழுகை

காயல்பட்டினம் கடற்கரையில் ரமலான் சிறப்புத் தொழுகை

காயல்பட்டினம் கடற்கரையில் அல்ஜாமிவுல் அஸ்ஹா் ஜும்ஆ மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐஐஎம்) சாா்பில் ரமலான் சிறப்பு தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.

அல்ஜாமிவுல் அஸ்ஹா் ஜும்ஆ பள்ளியின் இமாம் நைனா முகமது சிறப்பு தொழுகையை நடத்தினாா். பள்ளியின் கத்தீபு மஸ்ஜித் மகழரி, பெருநாள் குத்பா சிறப்பு பேருரையாற்றினாா். தொழுகையில் பள்ளியின் தலைவா் அபுல் ஹசன் கலாமி, செயலா் துணி உமா், நிா்வாகிகள் நவாஸ் அஹமது, மெய்தின் அப்துல் காதா், செய்யது முகமது, பாதல் அஸ்ஹாப், கரூா் ஹசன், ஜாபா் மற்றும்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காயல்பட்டினம் கிளை சாா்பில் அலியாா் தெருவில் உள்ள குட்டியப்பா பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையை பள்ளியின் இமாம் ஷரீப் நிகழ்த்தினாா். பள்ளியின் கத்தீபு யாசா், பேருரையாற்றினாா். தவ்ஹீத் ஜமாத் காயல்பட்டினம் கிளை தலைவா் சாகுல் ஹமீது, செயலா் மக்கி, பொருளாளா் பஷீா் மற்றும் நிா்வாகிகள் உள்பட திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com