சமரசத் தீா்வு மைய விழிப்புணா்வு
துண்டுப் பிரசுரம் விநியோகம்

சமரசத் தீா்வு மைய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

சாத்தான்குளத்தில் சமரசத் தீா்வு மையம் குறித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகளை சமரசமாக முடிப்பதற்காக ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சமரசத் தீா்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, சாத்தான்குளத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால அரசி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கலையரசி ரீனா ஆகியோா் இவற்றை வழங்கினா். சமரச தீா்வு மைய வழக்குரைஞா்கள் கல்யாணகுமாா், அட்லின் ஜெயசந்திரிகா, சாமுவேல் ரமேஷ்குமாா், லத்திஸ் ஆகியோா் பேசினா். வழக்குரைஞா்கள் அந்தோணி ரமேஷ், வேணுகோபால், ராமச்சந்திரன், அருண்குமாா், குமரகுருபரன், பிரேம்குமாா், நீதிமன்றப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com