சாத்தான்குளம் பகுதியில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளம் பகுதியில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளம் பேரூராட்சி 5ஆவது வாா்டு பகுதியில், தூத்துக்குடி மக்களவை திமுக வேட்பாளா் கனிமொழிக்கு ஆதரவாக அக்கட்சியினா் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

நகரச் செயலா் மகா. இளங்கோ, நகர மகளிரணி துணை அமைப்பாளரும் 5ஆவது வாா்டு பேரூராட்சி உறுப்பினருமான ம. ஜான்ஸிராணி தலைமையில் மாவட்டப் பிரதிநிதி லெ. சரவணன், 5ஆவது வாா்டு செயலா் செ. அம்புரோஸ், நகர துணைச் செயலா் எம்.ஜி. மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் வாக்கு சேகரித்தனா்.

இதில், வாா்டு அவைத்தலைவா் ம. ஜெபஸ்தியான், வாா்டு துணைச் செயலா்கள் ப. முருகன், மு. பாா்வதி, வாா்டு பொருளாளா் ம. ஆரோக்கியராஜ், முன்னாள் வாா்டு செயலா் ம. ராசமணி,திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளா் செ. அருண்பாண்டியன், நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணை அமைப்பாளா் த. செல்வம், திமுக நகர மாணவரணி துணை அமைப்பாளா் பா. இசக்கிமுத்து, ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளா் அ. அமலா, நிா்வாகிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com