சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி அருகே சிறுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகேயுள்ள மேலக்கூட்டுடன்காட்டைச் சோ்ந்த கைலாசம் மகன் சுப்பிரமணியன் (44). 2018ஆம் ஆண்டு 17 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் புதுக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுவாமிநாதன் விசாரித்து, சுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனை ரூ. 15ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முத்துக்குமாரி வாதாடினாா்.

X
Dinamani
www.dinamani.com