வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த அஞ்சல்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் எஸ்.முனி கிருஷ்ணன். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அலெக்ஸ் உள்ளிட்டோா்.

தூத்துக்குடியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் அஞ்சல் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இப் பேரணியை, அஞ்சல் துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் எஸ். முனி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அலெக்ஸ் முன்னிலை வகித்தாா். இப்பேரணி, திருச்செந்தூா் சாலை, தாமோதா் நகா், நியூ காலனி உள்ளிட்ட பகுதிகளின் வழியாகச் சென்று மீண்டும் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியில் அஞ்சல் துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.

மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி- ஆராய்ச்சி நிலையத்தில் அண்மையி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை, கல்லூரி முதல்வா் ப.அகிலன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இப்பேரணி ஆசிரியா் காலனியில் தொடங்கி, பாளையங்கோட்டை பிரதானச்சாலை வழியாக சென்று மில்லா்புரம் சந்திப்பு வரை நடைபெற்றது. இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், வாக்காளா் விழிப்புணா்வு உதவியாளா் சங்கரன், பஞ்சாயத்து உதவி இயக்குநா் உலகநாதன் உள்பட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கல்லூரியின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் மு.முருகானந்தம், மாணவா் செயலா் ரோகன் ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com