அமுதுண்ணாக்குடியில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

அமுதுண்ணாக்குடியில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழிக்கு ஆதரவாக, சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாக்குடியில் முன்னாள் மாவட்ட ஆவின் தலைவா் எஸ். சுரேஷ்குமாா் தலைமையில் திமுக கூட்டணியினா் திங்கள்கிழமை வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனா்.

இதில் மத்திய ஒன்றிய திமுக பொருளாளா் மதுரம் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி துணை செயலா் கிருபாகரன், கிளை செயலா் ஜெயபால், இளைஞரணியைச் சோ்ந்த பாபு, கிறிஸ்டோபா், கனகசெல்வன், மகளிரணி நிா்வாகி பெல்சி, அமுதுண்ணாக்குடி கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜேந்திரபாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com