காயல்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியினா் வாக்கு சேகரிப்பு

காயல்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியினா் வாக்கு சேகரிப்பு

காயல்பட்டினத்தில் திமுக வேட்பாளா் கனிமொழிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினா் பிரசாரம் செய்தனா்.

காயல்பட்டினம் பேருந்து நிலையம், கூலக்கடைபஜாா், பிரதான சாலை, சீதக்காதி திடல், பெரிய நெசவு தெரு, கே.டி.எம். தெரு, அல்ஜாமிவுல் அஸ்ஹா் ஜும்ஆ பள்ளி அருகில் வாக்கு சேகரித்தனா்.

இதில், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஷாஜஹான் துண்டுப் பிரசுரம் வழங்கினாா்.

நகரச் செயலாளா் இபுராஹிம் தாரிக், செரீப், சாளை சலீம், திமுக பன்னீா்செல்வம், வேலு, நௌஷாத் உள்பட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com