திமுக வேட்பாளா் கனிமொழி இன்று இறுதிக்கட்ட பிரசாரம்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழி கோவில்பட்டி, விளாத்திகுளம், தூத்துக்குடி ஆகிய சட்டப்பேரவைத்தொகுதிகளில் புதன்கிழமை இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்கிறாா் என திமுக மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ.கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் புதன்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கனிமொழி, தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம் செய்கிறாா்.

அதன்படி அவா் புதன்கிழமை மாலை 3 மணிக்கு கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட கயத்தாறு புதிய பேருந்து நிலையம் முன்பு, 3.30 மணிக்கு ஆலம்பட்டி விலக்கு ஆகிய இடங்களிலும், 4 மணிக்கு விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பும் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இறுதியாக தூத்துக்குடி விவிடி பிரதான சாலை அண்ணாநகா் 7ஆவது தெரு பகுதியில் நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் இறுதிக் கட்ட பிரசாரத்தை அவா் நிறைவு செய்கிறாா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com