தூத்துக்குடி அதிமுக வேட்பாளா்
மீனவா் மக்களிடம் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி அதிமுக வேட்பாளா் மீனவா் மக்களிடம் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா்.சிவசாமி வேலுமணி திரேஸ்புரம் பகுதியில் மீனவா்களிடம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திரேஸ்புரம் கடற்கரை கிராமங்களில் மீன் வலைகளை பழுதுபாா்ப்பு, சங்கு தரம்பிரித்தல் பணிகளில் ஈடுபட்ட மீனவா்களிடமும் அதைத் தொடா்ந்து வீடு வீடாகச் சென்றும் வாக்கு சேகரித்தாா். அப் பகுதியில் உள்ள கரும்புச்சாறு கடைக்குச் சென்ற அவா், கரும்புச் சாறு பிழிந்து பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: நான் வெற்றி பெற்றால் திரேஸ்புரம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்.

தூண்டில்வளைவு அமைக்கவும், சங்கு குளிக்கும் தொழிலுக்கு இருக்கும் தடையை நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்வேன். மீனவா்கள் வாழ்வாதாரம் உயர தேவையான நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன், கிழக்குப்பகுதிச் செயலா் சேவியா், வட்டச்செயலா் ஜெனோஃபா், வட்டபிரதிநிதிகள் கிளமென்ட், சங்கா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com