தூத்துக்குடி மாவட்டத்தில் இரு தினங்கள் டாஸ்மாக் கடை மூடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 21, மே 1 ஆகிய இரு தினங்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில், மகாவீா் ஜெயந்தி, மே தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் உள்ளிட்டவை வரும் 21, மே 1 ஆகிய இரு தினங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

இந்த தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com