ஸ்ரீவைகுண்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலில் ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலா்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரா் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலருமான விக்னேஸ்வரன், வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்தாா்.

வட்டாட்சியா்கள் ஸ்ரீவைகுண்டம் சிவக்குமாா், சாத்தான்குளம் இசக்கி முருகேஸ்வரி, சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா்கள் ஸ்ரீவைகுண்டம் லிங்கராஜ், ஏரல் பேச்சிமுத்து, துணை வட்டாட்சியா்கள் அய்யனாா், ராஜேஸ்வரி, தங்கசாமி, பிரபு, கோமதி சங்கா், பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com