செட்டிகுளம் ஊராட்சியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் செட்டிகுளம் ஊராட்சியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை தலைமை வகித்தாா். விரலின் மை எங்கள் உரிமை, 100 விழுக்காடு வாக்களிப்போம் ஆகிய வாசகங்களை அரிசி, பருப்பு, வாழைக்காய், வாழை இலை, பூக்களைக் கொண்டு எழுதி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்றோா் உறுதிமொழி ஏற்றனா். ஊராட்சிச் செயலா் ஜெனிபா் மொ்லின் ரோசி, திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா் ஹோ்லின் டெல்சி, சமுதாய வளப் பயிற்றுநா் ரீட்டா, புகழ், செல்வி உள்ளிட்ட மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com