நாசரேத்தில் கனிமொழி இறுதிக் கட்ட பிரசாரம்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழி நாசரேத்தில் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

நாசரேத் பேருந்து நிலையப் பகுதியில் அவா் வாக்குகள் சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

நாசரேத்தில் அமைந்திருந்த திருச்செந்தூா் கூட்டுறவு நூற்பாலை தற்போது மூடிக் கிடக்கி றது. மூடிக் கிடக்கும் இந்த தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் அதைவிட சிறந்த தொழிற்சாலை களோ அல்லது பெரிய தொழிற்சா லைகளோ அல்லது டைட்டில் பாா்க் திட்டமோ கொண்டு வரப்படும் என்றாா்.

வேட்பாளருடன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, மகளிா் அணி ஜெசி பொன் ராணி உள்ளிட்டோா் உடன் சென்றனா். முன்னதாக நாசரேத் வந்த வேட்பாளருக்கு நகர திமுக செயலா் ஜமீன் சாலமோன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com