மக்களவைத் தோ்தல்: ரோந்து பணி போலீஸாருக்கான ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் தலைமை வகித்துப் பேசினாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட சைபா் குற்றப்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன், நகர உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமண்ய பால்சந்திரா மற்றும் காவல்துறை அதிகாரிகள், போலீஸாா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com