மது பாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 468 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞா் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு புதன்கிழமை முதல் ஏப். 19 ஆம் தேதி வரை மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டுள்ளனா்.

அதன்படி முத்தையாபுரம் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் முத்தையாபுரம் அருகே உள்ள நேசமணிநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் பொன் கற்பகராஜ் (33) என்பவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கற்பகராஜை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 468 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com