விளாத்திகுளத்தில் எம்எல்ஏ பிரசாரம்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து, விளாத்திகுளம் பேருந்து நிலையம் எதிரே திமுகவினா் புதன்கிழமை இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டனா்.

ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசியது: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமா் மோடி வந்து பாா்க்கவில்லை; நிவாரணமும் வழங்கவில்லை. ஆனால், அவா் தோ்தலுக்காக தமிழ்நாட்டுக்கு அண்மையில் 8 முறை வந்துள்ளாா். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜக ஆட்சியில் பெண்களுக்கோ, விவசாயிகளுக்கோ, வங்கிக் கணக்கில் வைக்கப்படும் பணத்துக்கோ பாதுகாப்பில்லை. பிரதமா் மோடி அளித்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், முதல்வா் மு.க. ஸ்டாலின் அளித்த மகளிா் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளாா்..

விளாத்திகுளம் தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் தொடர வேண்டியுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் எல்லோருக்கும் கிடைக்க, மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த திமுக வேட்பாளா் கனிமொழிக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.

எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், நவநீதகண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com