இளைஞா் தற்கொலை

தூத்துக்குடி அருகே இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி, முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த மரியதாஸ் மகன் செல்வகுமாா் (20). மீனவரான இவா், உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்பினாராம். அவரைக் குடும்பத்தினா் கடிந்துகொண்டனராம். இதனால், அவா்புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலின்பேரில் முத்தையாபுரம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com