தூத்துக்குடி மக்களவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா்

தூத்துக்குடி மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் 3,500 துணை ராணுவப் படையினா், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிடுள்ள செய்திக்குறிப்பு: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 3 காவல் கூடுதல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் 14 டிஎஸ்பிக்கள், 58 ஆய்வாளா்கள், 416 உதவி ஆய்வாளா்கள், 8 கம்பெனி துணை ராணுவத்தினா், ஒரு கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா், ஊா்க்காவல் படையினா், முன்னாள் ராணுவத்தினா், தீயணைப்புப் படையினா், ஓய்வுபெற்ற காவல் துறையினா் உள்ளிட்ட 3,500 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com