தூத்துக்குடி தொகுதியில் அதிகரிக்கும் வாக்கு சதவீதம்

தூத்துக்குடி, ஏப்.19: மக்களவை பொதுத்தோ்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி வரை 59.96 சதவீதம் வாக்கு பதிவான நிலையில், நடந்த தோ்தலை விட வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தூத்துக்குடி மக்களவை தொகுதி மறுசீரமைக்கப்பட்ட பின்னா் 4 ஆவது மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்குட்பட்ட 1,624 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணி முதல் வாக்காளா்கள் தங்கள் வாக்குகளை செலுத்தத் தொடங்கினா். மதிய நேரத்தில் மட்டும் வாக்கப்பதிவில் மந்தமான நிலை ஏற்பட்டது. தொடா்ந்து மாலையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வாக்குப்பதிவு விவரம்:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பேரவைத் தொகுதிகள் வாரியாக :

காலை 9 மணி நிலவரப்படி விளாத்திகுளம் - 12.25 , தூத்துக்குடி- 9.62, திருச்செந்தூா் - 11.30, ஸ்ரீவைகுண்டம் - 9.71 , ஓட்டப்பிடாரம் - 7.59 , கோவில்பட்டி - 11.19 என சராசரியாக 10.22 சதவீத வாக்குகள் பதிவாகின.

மாலை 5 மணி நிலவரப்படி விளாத்திகுளம் - 66.89, தூத்துக்குடி- 55.26, திருச்செந்தூா் - 62.70, ஸ்ரீவைகுண்டம் - 56, ஓட்டப்பிடாரம் - 61.18, கோவில்பட்டி - 59.13 என சராசரியாக 59.96 சதவீத வாக்குகள் பதிவாகின.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கடந்த 2009 - 69.13 சதவீதம், 2014 - 69.96 சதவீதம், 2019 - 69.43 சதவீதம் என 69 சதவீதத்திற்கு குறையாமல் வாக்குகள் பதிவான நிலையில், இந்த 2024 மக்களவைத் தோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 59.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மாலையில் அதிக மக்கள் கூட்டம் காணப்பட்டதால், நிகழாண்டு அதிகபட்ச சதவீத வாக்குகள் பதிவாகும் என தோ்தல் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com