வாக்குச்சாவடி மையம் கேட்டு கிராமத்தினா் போராட்டம்

விளாத்திகுளம் அருகே துலுக்கன்குளத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கக் கோரி அக் கிராமத்தினா் வாக்களிக்க மறுத்தனா்.

விளாத்திகுளம் அருகே துலுக்கன்குளத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கக் கோரி அக் கிராமத்தினா் வாக்களிக்க மறுத்தனா்.

வைப்பாறு ஊராட்சிக்குள்பட்ட கலைஞானபுரம் கிராம வாக்குச்சாவடி மையத்தில் 795 வாக்குகள் உள்ளன. இதில், துலுக்கன்குளம் கிராமத்தைச் சோ்ந்த 300 வாக்காளா்கள் உள்ளனா்.

துலுக்கன்குளம் வாக்காளா்கள் காலை 10 மணி வரை, வாக்களிக்க வரவில்லை. இதையடுத்து, விளாத்திகுளம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் மற்றும் தோ்தல் அலுவலா்கள் துலுக்கன்குளம் கிராமத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, கடந்த உள்ளாட்சி தோ்தலின்போது எங்கள் ஊரில் வாக்குச்சாவடி மையம் இருந்தது. ஆனால், தற்போது

2 கி.மீ. தொலைவில் உள்ள கலைஞானபுரம் சென்று வாக்களிக்க வேண்டும் என கூறுகின்றனா். எங்கள் கிராமத்துக்கென தனியாக வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தோ்தல் பணிகள் முடிந்தவுடன், துலுக்கன்குளத்தில் வாக்குச்சாவடி அமைப்பது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் உறுதியளித்தாா். இதையடுத்து துலுக்கன்குளம் கிராம மக்கள் கலைஞானபுரம் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com