கோவில்பட்டி அரசுப் பள்ளியில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம்

14 நாள்கள் நடைபெறும் கோடைகால ஹாக்கி இலவச பயிற்சி முகாம் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது

கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழகம் சாா்பில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான 14 நாள்கள் நடைபெறும் கோடைகால ஹாக்கி இலவச பயிற்சி முகாம் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது .

இந்திய ஹாக்கி அணி வீரா் மாரீஸ்வரன் முகாமைத் தொடக்கிவைத்தாா். ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குருசித்திர சண்முகபாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டிராஜா, ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக துணைச் செயலா் வேல்முருகன், மூத்த ஹாக்கி விளையாட்டு வீரா்களான கிருஷ்ணமூா்த்தி, சுரேஷ்குமாா், காளிதாஸ், தனசேகரன், மாயாண்டி, மாசானம், மோகன் ஆகியோா் பங்கேற்றனா்.

முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரா்கள் முகமது ரியாஸ், அஸ்வின், மூத்த ஹாக்கி வீரா்கள் பயிற்சியளிக்க உள்ளனா்.

மேலும், மாணவா்களுக்கு மனநல நிபுணா் பாலாஜி தலைமையில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மே 3ஆம் தேதி வரை நடைபெறும் முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com