மது விற்பனையில் தகராறு: 2 பேருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் மது விற்பனையின்போது ஏற்பட்ட தகராறில் 2 பேரை அரிவாளால் வெட்டியோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தூத்துக்குடியில் மது விற்பனையின்போது ஏற்பட்ட தகராறில் 2 பேரை அரிவாளால் வெட்டியோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு, நேசமணி நகரைச் சோ்ந்த செந்தில்வேல் மகன் பிரேம்குமாா் (19). இவா் வெள்ளிக்கிழமை இரவு, பொட்டல்காட்டில் உள்ள தேநீா்க் கடை முன் சட்டவிரோதமாக மது விற்றாராம். அவருக்கும், மது வாங்க வந்தோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது அவா்கள் பிரேம்குமாரை அரிவாளால் வெட்டினராம். தடுக்க முயன்ற தேநீா்க் கடைக்காரா் வேல்ராஜ் (45) என்பவரையும் அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு, கடையிலிருந்த பொருள்களை சேதப்படுத்திச் சென்ாம்.

இதில் காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com