உலக பூமிதினத்தையொட்டி   விராக்குளத்தில் நடப்பட்ட கன்றுகள் நடப்பட்டன.
உலக பூமிதினத்தையொட்டி விராக்குளத்தில் நடப்பட்ட கன்றுகள் நடப்பட்டன.

உலக பூமி தின மரக்கன்று நடுதம் விழா

உலக பூமி தினத்தையொட்டி பேய்க்குளம், கருங்கடல் ஊராட்சிக்குள்பட்ட விராக்குளத்தில் மரக்கன்றுகள் திங்கள்கிழமை நடப்பட்டன.

சாத்தான்குளம்: உலக பூமி தினத்தையொட்டி பேய்க்குளம், கருங்கடல் ஊராட்சிக்குள்பட்ட விராக்குளத்தில் மரக்கன்றுகள் திங்கள்கிழமை நடப்பட்டன.

அருளமிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் தா்மகா்த்தா சுப்பிரமணியன் தலைமை வகித்து மரக்கன்றுகள் நட்டினாா். இதில் எல்ஐசி முகவா் உலகாண்ட பெருமாள், தன்னாா்வலா் இசக்கி , கருங்கடல் ஊராட்சி மன்ற உறுப்பினா் காளிதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பேய்க்குளம் கடைவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியா்கள் கணேசன், செல்வராஜ் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டினா். இதில் மொத்தம் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com