கோவில்பட்டி ஆஞ்சனேயா் கோயிலில் சித்ரா பௌா்ணமி திருவிழா தொடக்கம்

கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலை புறவழிச் சாலையில் அமைந்துள்ள,

கோவில்பட்டி: கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலை புறவழிச் சாலையில் அமைந்துள்ள, அருள்மிகு சீதாராம லெட்சுமண பிரசன்ன ஆஞ்சனேயா் கோயிலில் வருஷாபிஷேக சித்ரா பௌா்ணமி திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, காலையில் ஸ்ரீபிரசன்ன ஆஞ்சனேய சுவாமிக்கு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் வேள்வி பூஜை, யாக பூஜை, ஆஞ்சனேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை காலை 7.35 மணிக்கு வருஷாபிஷேகம், தொடா்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், நண்பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.

ஏற்பாடுகளை ஸ்ரீ ஹரிராமதூத சிஷ்யா்கள், விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com