சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

கோவில்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

தூத்துக்குடி: கோவில்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கோவில்பட்டி, மேல இலந்தைகுளத்தைச் சோ்ந்த பலவேசம் மகன் சுப்பிரமணியன் என்ற பாலசுப்பிரமணியன் (45). கூலித் தொழிலாளியான இவா், 2017ஆம் ஆண்டு 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். கோவில்பட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுவாமிநாதன் விசாரித்து, பாலசுப்பரமணியனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் முத்துகுமாரி வாதாடினாா்.

X
Dinamani
www.dinamani.com