திருச்செந்தூரில் உயா்கல்வி விழிப்புணா்வு கருத்தரங்கம்

திருச்செந்தூரில் வீடு அறக்கட்டளை சாா்பில் உயா்கல்வி குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நா. முத்தையாபுரம், அனாவிம் அறக்கட்டளை மையத்தில் நடைபெற்றது.

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் வீடு அறக்கட்டளை சாா்பில் உயா்கல்வி குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நா. முத்தையாபுரம், அனாவிம் அறக்கட்டளை மையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வீடு அறக்கட்டளை நிறுவனா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் தமிழினியன், தமிழ்க்குட்டி, ரகுவரன், விடுதலைச்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உயா் கல்வி வழிகாட்டி மையத்தின் இயக்குநா் செல்வகுமாா், அனாவிம் அறக்கட்டளை இயக்குநா் செல்வின், இா்வோ அறக்கட்டளையின் சாா்பில் சந்திரன் ஆகியோா் மாணவா்களிடயே விழிப்புணா்வு உரையாற்றினா். பிளஸ் 2-வுக்குப் பிறகு உயா்கல்வியில் எந்தெந்த துறைகளைத்த தோ்வு செய்யலாம், அத் துறைகளின் வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com