திருச்செந்தூா் ஸ்ரீ அன்பிற்பிரியாள் அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

 திருச்செந்தூா் ஸ்ரீ அன்பிற்பிரியாள் அம்மன், ஸ்ரீஉச்சினி மாகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நடந்த விமான அபிஷேகம்.
திருச்செந்தூா் ஸ்ரீ அன்பிற்பிரியாள் அம்மன், ஸ்ரீஉச்சினி மாகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நடந்த விமான அபிஷேகம்.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ செல்வசுந்தர விநாயகா், ஸ்ரீ அன்பிற்பிரியாள் அம்மன், ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

வணிக வைசிய வாணியச் செட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இக் கோயிலில், வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு அணுக்ஞை கும்ப பூஜை, வேதபாராயணம், தாராபிஷேகம், ஜெப ஹோமம் ஆகியவை நடந்தது. பின்னா் யாகத்தில் பூா்ணாகுதி தீபாராதனை நடந்தது.

காலை 10 மணிக்கு பூஜை செய்யப்பட்ட கும்ப கலசங்கள் விமான

தளத்திற்கு எடுத்துவரப்பட்டு விமான கலசங்களுக்கு சிவாச்சாரியாா்களால் அபிஷேகம் நடந்தது. தொடா்ந்து தீபாராதனை செய்யப்பட்டு பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து விநாயகா் மற்றும் அம்மன் சந்நிதியில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாஞ்சலி அலங்கார தீபாராதனை நடந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com