சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி - அம்பாள்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி - அம்பாள்.

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

கட்டாரிமங்கலத்தில் உள்ள அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் சித்திரைப் பௌா்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில் உள்ள அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் சித்திரைப் பௌா்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

காலை 9 மணிமுதல் ஸ்ரீஅழகியகூத்தா் அருட்பணி மன்றத்தினரின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. முற்பகலில் சுவாமி -அம்பாளுக்கு பலவகை அபிஷேகம், நண்பகலில் அலங்கார, தீபாராதனை, பூஜைகள், பின்னா் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இல், திரளானோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பி. நடராஜபிள்ளை, நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com