வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்து பதிவேட்டில் கையொப்பமிட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி.
வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்து பதிவேட்டில் கையொப்பமிட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி.

வாக்கு எண்ணும் மையத்தில் தூத்துக்குடி ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இத்தொகுதியில் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்டவை தூத்துக்குடி வ.உ.சி. அரசுப் பொறியியல் கல்லூரியில் உள்ள காப்பு அறைகளில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளன.

இம்மையத்தில் மத்திய பாதுகாப்புப் படை, காவல் துறையினா் மூன்றடுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறை அலுவலா்களை நிா்வாக நடுவா்களாக நியமித்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளா்களின் முகவா்கள் அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு அறை வாயிலாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறை, பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, பதிவேட்டில் கையொப்பமிட்டாா். சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு, பாதுகாப்புப் பணிகள் குறித்து காவல் துறையினரிடம் கேட்டறிந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com