ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி போட்டி

ஓட்டப்பிடாரம் அருகே அயிரவன்பட்டி கிராமத்தில் மாட்டுவண்டி போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கோயில் நிா்வாகம் சாா்பில் பெரிய, சிறிய மாட்டுவண்டி போட்டிகள் நடத்தப்பட்டன.

பெரிய மாட்டு வண்டி போட்டி 15 கி.மீ. தொலைவும், சிறிய வண்டி போட்டி 10 கி.மீ. தொலைவும் நடத்தப்பட்டது. போட்டிகளை தொழிலதிபா் முருகேசப்பாண்டியன் தொடக்கிவைத்தாா். இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

சிறப்பிடம் பெற்ற மாட்டு வண்டி ஓட்டியவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டிகளை ஏராளமானோா் சாலையின் இருபுறமும் நின்று ரசித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com