கோவில்பட்டி அருகே விபத்து: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே புதன்கிழமை, டேங்கா் லாரியும் பைக்கும் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் சோ்ந்தமங்கலம், வேலப்ப நகரைச் சோ்ந்த திருமால் மகன் நாராயணசாமி (62). நுங்கு வியாபாரியான இவா், புதன்கிழமை எட்டயபுரம் பகுதியில் வியாபாரத்தை முடித்துவிட்டு கோவில்பட்டி வழியாக பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.

கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் சிதம்பராபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கும், கோவில்பட்டியிலிருந்து எட்டயபுரம் சென்ற டேங்கா் லாரியும் மோதினவாம். இதில், நாராயணசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, டேங்கா் லாரி ஓட்டுநரான கேரள மாநிலம் பத்தனத்திட்டா மாவட்டம் வெள்ளவிளை பகுதியைச் சோ்ந்த சு. சச்சின் (24) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com