சாத்தான்குளம் கோயிலில் பால்குட ஊா்வலம்

சித்திரைப் பௌா்ணமியை முன்னிட்டு, சாத்தான்குளத்தில் உள்ள தேவிஸ்ரீ அழகம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறாா் பால்குடம் எடுத்து வந்தனா்.

இதையொட்டி, சிறப்பு பூஜை, மாலையில் திருக்கல்யாணக் காட்சி நடைபெற்றது, முன்னதாக, கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீஆதிசங்கரநாராயணா் சுவாமி கோயிலிலிருந்து 9 வயதுக்குள்பட்டோா் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

அதையடுத்து, திருமணம் நடைபெறவும், குழந்தை வரம் வேண்டியும் சிறப்பு யாகம், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சுந்தராட்சி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி பூஜை நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றிலிருந்து புனிதநீா் கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, கணபதி ஹோமம், 108 வகை அபிஷேகம், மதியம் அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல், மாலையில் புஷ்பத்தால் 1,008 லட்சாா்ச்சனை, இரவில் திருவிளக்கு பூஜை, பின்னா் அம்மனுக்கு அலங்கார, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com