அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

நீா்மோா் பந்தலைத் திறந்துவைத்து பொதுமக்களுக்கு குளிா்பானம் வழங்கிய முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன். உடன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் திருச்சிற்றம்பலம் உள்ளிட்டோா்.

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் அதிமுக சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தல் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் நீா்மோா் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தாா். அதன்படி, தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலரும் வட்டச் செயலருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் நீா்மோா் பந்தல் அமைக்கப்பட்டது.

தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் திறந்துவைத்து, மோா், பழரசம், இளநீா், குளிா்பானங்கள், பல்வேறு பழவகைகளை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

மாநில வா்த்தகா் அணிச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், அமைப்புச் செயலா் என். சின்னத்துரை, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா்கள் அணிச் செயலா் இரா. சுதாகா், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் இரா. ஹென்றி, அண்ணா தொழிற்சங்கச் செயலா் டேக். ராஜா, மாவட்ட மாணவரணிச் செயலா் பில்லா விக்னேஷ், வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா்கள் ஆண்ட்ரூமணி, சரவணபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com