கடையில் மதுபானம் விற்பனை செய்தவா் கைது

ஆறுமுகனேரியில் கடையில் மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (28). இவா் ஆறுமுகனேரியில் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிகண்ணன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தி, அரசு முத்திரையுடன் கூடிய 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com