கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சி.
கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சி.

கோவில்பட்டி  புனித  சூசையப்பா் திருத்தல திருவிழா  கொடியேற்றம்

கோவில்பட்டி, ஏப். 26: கோவில்பட்டி  புனித  சூசையப்பா்  திருத்தல திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி,  திருத்தல வளாகத்தில் உள்ள பங்குத்தந்தையா் இல்லத்திலிருந்து காமநாயக்கன்பட்டி பேராலய பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் அடிகளாா், திருச்சி புனித பவுல் குருமடம் அருள்பணி ராஜேஷ் அடிகளாா், கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தல உதவிப் பங்குத் தந்தை அந்தோணி ராஜ் அடிகளாா், இறை மக்கள் ஆகியோா் இணைந்து கொடிகளை பவனியாக எடுத்து வந்தனா்.

பின்னா், ஆலயம் முன் உள்ள கொடிமரத்தில் காமநாயக்கன்பட்டி பேராலய பங்குத்தந்தை ஆசீா்வதித்து கொடியேற்றினாா். தொடா்ந்து, வெண்புறா பறக்கவிடப்பட்டு திருப்பலி தொடங்கியது. அதில், ஆபிரகாமின் இறைவேண்டல் எனும் தலைப்பில் மறையுரை நிகழ்த்தப்பட்டது.

கொடியேற்ற நிகழ்ச்சியில், திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும ம் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நற்செய்தி பெருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை சாா்லஸ் அடிகளாா், உதவிப் பங்குதந்தை, அமலவை அருள்சகோதரிகள், பங்குப் பேரவையினா், அன்பிய குடும்பத்தாா், இறைமக்கள் ஆகியோா் செய்து வருகின்றனா். 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com