திருமண மண்டபத்தில் தங்கச் சங்கிலி திருட்டு: தொழிலாளி கைது

கோவில்பட்டி, ஏப். 26: கோவில்பட்டியில் திருமண மண்டபத்தில் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற சுமை தூக்கும் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சி செந்தில் காலனியைச் சோ்ந்தவா் ராஜகோபால் மனைவி லெட்சுமிபிரபா (36). இவா் தனது ஐந்தரை வயது மகளுடன் இம்மாதம் 21ஆம் தேதி நகராட்சி அலுவலகம் சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றிருந்தாராம். அப்போது மண்டபத்தில் தனது மகளின் சுமாா் இரண்டு பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை கழற்றி கீழே வைத்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டிருந்தபோது ஒருவா் சங்கிலியை திருடிக் கொண்டு தப்பி ஓடி விட்டாராம்.

இதுகுறித்து லெட்சுமிபிரபா அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் மண்டபத்திற்குள் அத்துமீறி நுழைந்து தங்கச் சங்கிலியைத் திருடியதாகக் கூறப்படும் கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த மாரியப்பன் மகன் சுமை தூக்கும் தொழிலாளி ரத்தினவேலை (41) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com