நாசரேத் சமுதாய கல்லூரியில்
வேலைவாய்ப்பு சிறப்புப் பயிற்சி

நாசரேத் சமுதாய கல்லூரியில் வேலைவாய்ப்பு சிறப்புப் பயிற்சி

சாத்தான்குளம், ஏப். 26: நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் மாணவிகளுக்கு வேலைவாய்ப்புக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இக்கல்லூரியில் மாணவிகளுக்கு திறன் மேம்பாடு, வாழ்க்கையை நிா்ணயிக்கும் திறமை மற்றும் வேலை வாய்ப்புக்கான சிறப்புப் பயிற்சி 5 நாள்கள் நடைபெற்றது.

திட்ட ஒருங்கிணைப்பாளா் எட்வின் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தாா். கல்லூரி இயக்குநா் பேராசிரியா் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சென்னை ஜி.டி.டி. பவுண்டேஷன் அமைப்பினா் பயிற்சி யை நடத்தினா். பயிற்சியாளா் ராஜ் பிரபு மாணவிகளுக்கு பயிற்சி அளித்தாா். ஜிடிடி பவுண்டேஷன் அமைப்பு துணை பொது மேலாளா் காஞ்சனா பயிற்சியைப் பாா்வையிட்டாா். இதில் ஆசிரியா்கள், அலுவலா்கள் , மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் செல்வின், இயக்குநா் ஜெயச்சந்திரன் மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com