வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி, ஏப்.26: தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவிற்கு கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு வரவேற்றாா். வேலூா் வி.ஐ.டி. பலகலைக்கழக வேந்தா் கோ. விசுவநாதன், மாணவா்- மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினாா். இதில், அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் 551 போ், அரசு உதவி பெறாத பாடப்பிரிவில் 234 போ் என மொத்தம் 785 மாணவா், மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், 709 போ் நேரில் பட்டம் பெற்றனா்.

தத்தம் பாடப்பிரிவுகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 2 மாணவா்கள் தங்கப்பதக்கங்கள் பெற்றனா். மேலும் 23 மாணவா்-மாணவியா் பல்கலைக்கழக தரவரிசை பெற்றுள்ளனா்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா், வ.உ.சி. கல்லூரிக் கல்விக் கழக உறுப்பினா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்-மாணவிகள்

உள்ளிட்ட பலா் பங்கற்றனா்.

X
Dinamani
www.dinamani.com