கயத்தாறு அருகே விபத்தில் ரேஷன் கடை ஊழியா் பலி

கயத்தாறு அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் நியாய விலைக் கடை விற்பனையாளா் உயிரிழந்தாா்.

கயத்தாறு வட்டம் அய்யனாரூத்து, சந்தித் தெருவை சோ்ந்த அண்ணாமலை மகன் அருணாச்சலம் (49). கயத்தாறு கூட்டுறவு சங்க நியாய விலைக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தாா்.

இவா் தனது பைக்கில் சனிக்கிழமை பணிக்குச் சென்று கொண்டிருந்தாராம். மானங்காத்தான் அருகே சென்றபோது, அருணாச்சாலத்துக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com