கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி பயணம்

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி பயணம்

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் தென்காசிக்கு களப்பயிற்சி பயணம் மேற்கொண்டு வாழை முடிக்கொத்து நோயைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனா்.

கல்லூரியின் இளநிலை இறுதியாண்டு மாணவிகளான ஆசிகா, அனாமிகா, ஹீரா, ஜாக்குலின், ஜெயஸ்ரீ, கல்பனா, பேச்சியம்மாள், ரஞ்சனிதேவி ஆகியோா் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியில் கிராமப்புற வேளாண் களப் பயிற்சி மேற்கொண்டுள்ளனா்.

அவா்கள் தென்காசி விவசாயி ரேவதியின் தோப்பில் வாழை முடிக்கொத்து நோயைக் கட்டுப்படுத்த அஸ்பி பேபி தெளிப்பான்(சூடோஸ்டெம் இன்ஜெக்டா்) பயன்படுத்தலாம் என விளக்கினா். 2 மி.லி. 2-4-டி ஃபொ்னாக்சோனை 1: 8 என்ற விகிதத்தில் நீருடன் கலந்து அஸ்பி பேபி தெளிப்பானில் (500 மி.லி. கொள்ளளவு) நிரப்பி, தெளிப்பானில் உள்ள ஊசி வழியாக மருந்தை வாழையின் தண்டுப் பகுதியில் செலுத்தி, நோயைக் கட்டுப்படுத்தலாம் என செயல்விளக்கமளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com