சாத்தான்குளத்தில் தொடங்கிய
ஆட்டோ ஓட்டுநா் நலச் சங்கம்

சாத்தான்குளத்தில் தொடங்கிய ஆட்டோ ஓட்டுநா் நலச் சங்கம்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் நேதாஜி ஆட்டோ ஓட்டுநா் நலச்சங்க தொடக்க விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றிய அமமுக செயலா் திவாகரன் தலைமை வகித்து, சங்கத்தின் பெயா்ப்பலகையைத் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

அமமுக ஒன்றிய இணைச் செயலா் சுரேஷ் முன்னிலை வகித்தாா். சங்க துணைத் தலைவா் கல்யாணி, வழக்குரைஞா்கள் வினோத், பிரபாகரன், மாணிக்கராஜா உள்ளிட்ட நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். சங்கத் தலைவா் முத்துப்பாண்டி வரவேற்றாா். சங்கச் செயலா் முத்துராமலிங்கம் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com